அறங்கூவி விற்றல்
நல்லான் மேலான் நானிலத்தில்
வல்லான் இல்லானிடர் துடைப்பானெனத்
திக்கெலாஞ் சொல்லித் தன்துதிபாடிக்கூடிப்
பின்னொருநாள் புறங்காலால் மிதித்துச்
சிதைத்தபின் சிரிப்புடனே
நறுக்கிய முலைகளின்
நடுநிலைமைக் கணக்கை
நல்லோரெலாங் கூடி நிர்ணயம் செய்திடுவர்.
அறநிதங்கூவி வித்திடுமிவர்
நிறங்கலையுமொரு நிமிடத்தில்
திமிறித் தலைகாட்டும் நாக்கு
குருதிநக்கிய சுவையுரைக்கும்.
குதறிக்கடித்தைக் கதறியடித்ததைக்
களிப்பாய்க் கிசுகிசுக்கும்.
தேசம்காத்திடுமிவர் நேசமனத்தினை
திறம்வியந்து செயல்மறந்து போற்றுதுமே.
வல்லான் இல்லானிடர் துடைப்பானெனத்
திக்கெலாஞ் சொல்லித் தன்துதிபாடிக்கூடிப்
பின்னொருநாள் புறங்காலால் மிதித்துச்
சிதைத்தபின் சிரிப்புடனே
நறுக்கிய முலைகளின்
நடுநிலைமைக் கணக்கை
நல்லோரெலாங் கூடி நிர்ணயம் செய்திடுவர்.
அறநிதங்கூவி வித்திடுமிவர்
நிறங்கலையுமொரு நிமிடத்தில்
திமிறித் தலைகாட்டும் நாக்கு
குருதிநக்கிய சுவையுரைக்கும்.
குதறிக்கடித்தைக் கதறியடித்ததைக்
களிப்பாய்க் கிசுகிசுக்கும்.
தேசம்காத்திடுமிவர் நேசமனத்தினை
திறம்வியந்து செயல்மறந்து போற்றுதுமே.
1 Comments:
At 10:44 AM,
Anonymous said…
//நறுக்கிய முலைகளின்
நடுநிலைமைக் கணக்கை
நல்லோரெலாங் கூடி நிர்ணயம் செய்திடுவர்//
இந்த நல்லோரின் புள்ளிவிவரமெல்லாம் எப்படி இவைகளை திறப்பட மக்களுக்கு எதிராக பயன்படுத்துவது என்பதற்கே. தடாவால் கைது செய்யப்பட்டவர்களில் 14 வயது சிறுவன் முதல் 70 வயது கிழவர் வரை வயது, பால் வேறுபாடன்றி 98% பேர் குற்றமற்றவர்கள் என்று புள்ளிவிவரம் சொல்லும். அதற்குப்பிறகே பொடாவந்தது. 28 ஆண்டுகளாக மணிப்பூரில் சிறப்பு ஒடுக்குமுறைச் சட்டங்களால் பயனேதும் இல்லை; ஆனாலும் அதைப் பற்றிய திறந்த, கரிசனையான விவாதங்கள் இல்லை; மக்கள் கருத்து அறியும் முயற்சிகள் இல்லை; அனுசரணையான அரசியல் முன்னோக்கில்லை. வெறும் தேர்தல் நடத்துவதை ஜனநாயகம் என்று நம்புகிறோம்; நம்பச்சொல்கிறோம். கேட்டால் பாதிக்கப்பட்ட ஓரிருவர் கோர்ட்டுக்குப்போய் 20 வருடங்கழித்து ஏதாவது (அதற்கு நடுவில் குடும்பத்தில் பலரை சாவுக்குக் கொடுத்து)பெற்றிருப்பதைச் சுட்டுவார்கள். - தங்கமணி
Post a Comment
<< Home