தமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்

பத்ரியின் இன்றைய பதிவில் தமிழி செம்மொழி ஆக்கப்படலாம் என்றும் ஆனால் அதனால் என்ன பயன்விளையலாம் என்றும் கேட்டிருக்கிறார். தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்படவேண்டும் என்று உறுதியாக நான் எண்ணுகிறேன். எனது காரணங்களைக் காட்டிலும் வலையில் தேடியதில் கிடைத்ததை இங்கு இடுகிறேன்.
தீராநதியில் மணவை முஸ்தபாவின் கேள்வி பதிலிலிருந்து:
தீராநதி: தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதன் மூலம் என்ன நன்மைகள் விளையும்?
மணவை முஸ்தபா: முதலில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடக்கும். இப்போது கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவை தொடர்பான ஆய்வுகள் சமஸ்கிருதத்தை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுகின்றன. அளவுகோலைப் பொறுத்துதான் முடிவுகள் அமையமுடியும். தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களை வைத்து சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்று அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் செம்மொழி ஆக்கப்படும் போது தமிழ் அளவுகோலாக மாறும். இதனால், நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும். மேலும் இக்காலக்கட்டத்துக்கு ஏற்றபடி தமிழ்மொழியை அறிவியல் பூர்வமாக வளர்ப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகளுக்கும் நிதியுதவிகள் அதிகம் கிடைக்கும்.
மேலும்..
ஒரு மொழி செம்மொழி ஆக்கப்பட வேண்டுமென்றால் பதினோரு அம்சங்களில் அது தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடு, கலை, பட்டறிவு, பிறமொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, மொழியியல் கோட்பாடுகள் இவைதான் தகுதிகள். செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மொழிகளுமே இந்த பதினோரு அம்சங்களிலும் தகுதியுடையவை என்று சொல்ல முடியாது. குறிப்பாக சமஸ்கிருதம் ஏழு அம்சங்களில்தான் பொருந்துகிறது. ஆனால் பதினொரு அம்சங்களிலும் தகுதியுடைய மொழியாக தமிழ் இருக்கிறது....
அடுத்து இந்திய நடுவண் அரசின் கல்வித்துறைத் தளத்திலிருந்து எடுத்த செம்மொழிக்கு அளிக்கப்படும் சலுகைகளின் பட்டியல் (எனது மொழியாக்கம்):
1. ஒவ்வொரு வருடமும் "கேந்திரிய சன்ஸ்கிருத வித்யாபீடங்களில்" 2524 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சமஸ்கிருதத் தேர்வு எழுதுகிறார்கள் . 473 பேருக்கு உதவித் தொகை, 300 பேருக்குத் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.
2. 68 புது ஆய்வுகள் வெளியிட உதவப்படுகிறது.
3. 750 தன்னார்வ அமைப்புக்களுக்கும், 15 குருகுலங்களுக்கும் 30 லட்சத்திற்குமதிகமான உதவித் தொகை வழங்கப்படுகிறது.
4. அகராதி பதிப்பிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது.
5. 6 லட்ச ரூபாய் "ஆதர்ஷ சமஸ்கிருத பாடகசாலைக்கு" வழங்கப்படுகிறது.
6. அராபிய, பாரசீக மொழிவளர்ச்சிக்கு ரூ. 6 லட்சம் அளிக்கப்படுகிறது.
7. ஆயிரத்துக்கும் அதிகமான "சமஸ்கிருத பண்டிதர்களுக்கு" மாதம் ரூ.1800 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மற்ற வசதிகளுக்காக ரூ. 19.30 லட்சம் செலவிடப்படுகிறது.
8. சமஸ்கிருத இலக்கியங்களை வளர்க்கும் வகையில் 65000 க்கும் அதிகமான சமஸ்கிருத பக்கங்கள் பல்கலைக்கழகங்களால் அச்சடிக்கப்படுகிறது.
9. சமஸ்கிருதத்தைப் பரப்பும் வகையில் "சிரவணா பூர்ணிமா" தினம் சமஸ்கிருதத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
என்கருத்து:
இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? மற்ற எல்லா மொழி பேசும் மக்களின் வரிப்பணத்தில் செய்யபடுகிறது. என்ன மொத்தத்தில் பெரிய பணமொன்றுமில்லை என்று நீங்கள் சொல்லாம். உண்மை தான். லட்சமெல்லாம் அதிகமில்லை. ஆனால் இந்தப் புள்ளிவிவரம் வெளிவந்த ஆண்டு 1978 !!. இன்று எத்தனை கோடிக்கோடியோ. இதெல்லாம் தமிழுக்கு வேண்டாமா ??

1 Comments:
At 4:35 AM, Anonymous said…
like tumbler and tipsy days hopefully we will remain in high spirits. well, good day
Post a Comment
<< Home