வருடத்தில் ஒருமுறை...
இப்படியாக ஓரிரு வருடங்கள் கழிந்தது.. மீண்டும் மெதுவாக இங்கு எட்டிப் பார்க்கும் எனது ஊக்கம் இன்னும் சில நிமிடங்களில், நாட்களில், மாதங்களில் தொலைந்து போகலாம். அதுவரையில் ஏதாவது எழுத முடியுமானால் நல்லது தான்.
இந்த இரண்டு வருடத்தில் நிறைய நடந்திருக்கிறது. சில நிகழ்வுகள் முக்கியமானவை, பல இயந்திர நியதிக்குட்பட்டவை. வழக்கமான வேலை, வீடு, நரை , திரையைத் தவிர்த்தால் வாழ்வின் மகிழ்வான பக்கங்களை குழந்தைகள் எழுதுகின்றனர். கதிரும், சுடரும் தங்களது புன்னகைகளாலும், குறும்புகளாலும் எங்களின் நாட்களை நிறைக்கின்றனர். அமைதியாய் தோளில் தவழ்ந்த கதிர், எல்லா இரண்டு வயதுப் பையன்களையும் போல விளையாட்டுப் பொருட்களும், மழலைப்பேச்சுமாய் ஓடி விளையாடுகிறான். இப்பொழுது , அமைதியாய் தோளில் தவழ்கிறான் சுடர்.

1 Comments:
At 6:45 PM,
-/பெயரிலி. said…
ஓஹோ! இப்படியாக ஓர் இடுகை வந்திருக்கிறதா?
சுடரும் வந்தாகிவிட்டதா? சொல்லவேயில்லையே?
பதிவைத் தொடரலாமே?
Post a Comment
<< Home